hello madras mobile banner 1200x300

ரிபோஸ்மேட்ரஸ்-  ஸ்மார்ட் கிரிட் மெத்தைகள் அறிமுகம்…

ரிபோஸ் மெத்தைகள் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மெத்தை உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று. இதற்கு, கோவை, பூணா, மீரட் ஆகிய நகரங்களில் ஆலைகள் உள்ளன. 400 பணியாளர்களோடு, இந்தியா எங்கும் 1,500 விற்பனை முகவர்களோடு இயங்கி வரும் ரிபோஸ் நிறுவனத்தின் கடந்த நிதியாண்டு விற்று முதல் (டர்ன்ஓவர்) 103 கோடி ரூபாய் ஆகும்.

இது தொடர்பாக பேசிய ரிபோஸ் மெத்தைகள் நிறுவனத்தின் தலைமை விற்பனை அலுவலரான வி. பாலாஜி, “தற்போது தென்இந்திய சந்தைகளின் தேவைகளை நிறைவேற்றி வரும் ரிபோஸ், வடஇந்தியாவிலும் விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. தில்லி, பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் காலூன்றி, 200 விற்பனை முகவர்களை நியமிப்பதே எங்களது நோக்கம். ஒடிஷாவின் புவனேஸ்வர் நகரத்தில் மற்றொரு உற்பத்தி ஆலையை அமைப்பதற்கான முயற்சியை எடுத்து வருகிறோம். இந்த நிதியாண்டில் எங்கள் டர்ன் ஓவரை 200 கோடி ரூபாய் அளவுக்கு உயர்த்துவதே எங்கள் இலக்கு. தமிழ்நாட்டில், எங்கள் விற்பனையை 30 கோடி ரூபாயில் இருந்து 60 கோடி ரூபாயாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக, தற்போதுள்ள 400 முகவர்களின் எண்ணிக்கையை 600 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.

மேலும், “எங்களது பிராண்டு அம்பாசிடராக நடனப்புயல் பிரபுதேவா ஒப்பந்தம் செய்துள்ளோம். அவருக்கு நாடெங்கும் ரசிகர்கள் உண்டு. அவருடைய ஆளுமையைப் பயன்படுத்திக் கொண்டு, ரிபோஸ் இந்திய அளவிலான மெத்தைகள் பிராண்டாக உயர திட்டமிட்டுள்ளது. அவரை மையப்படுத்திய தொலைக்காட்சி மற்றும் வலைதள விளம்பரங்களை சமீபத்தில் வெளியிட்டுள்ளோம்.” என்று கூறினார்.

‘புதுமை கருத்துகளுக்கு வரவேற்பு கொடுங்கள்’ (வேக் அப் டு ஃப்ரெஷ் ஐடியாஸ்) என்ற பிராண்டு தத்துவத்தின் படியும் புதுமையான மெத்தைகளை உற்பத்தி செய்யும் திட்டத்தின் படியும், சந்தையை மேலும் விரிவாக்குவதற்காகவும், ரிபோஸ் தற்போது, ஸ்மார்ட் கிரிட் மெத்தைகள் என்ற புதிய வகை மெத்தைகளை அறிமுகம் செய்துள்ளது.

இதைப் பற்றி, ரிபோஸ் மெத்தைகள் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் துணைத்தலைவர் ரவிபண்டித் கூறும் போது “மிக நவீன தொழில் நுட்பத்தைக் கொண்டு, ஹைப்பர்-எலாஸ்டிக் பாலிமர் பொருட்களைக் கொண்டு ஸ்மார்ட் கிரிட் மெத்தைகள் தயார் செய்யப்படுகிறது. ‘கம்பர்ட் தொழில் நுட்பம்’என்ற துறையில் இது மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தும்,” என்றார்.

ஸ்மார்ட் கிரிட் தொழில் நுட்பத்தின் பயன்கள்:

இந்த மெத்தைகள், உடற்பகுதிகளில், எங்கு மெத்தென்று இருக்க வேண்டுமோ அங்கே மெத்தென்று இருக்கும்; எங்கு அழுத்தத்துடன், உறுதியாக இருக்க வேண்டுமோ, அங்கே உறுதியாக இருக்கும். உதாரணமாக, தோள்கள் மற்றும் இடுப்புப் பகுதிகளில் மெத்தென்று இருக்கும். முதுகு பகுதியில் உறுதியுடன் இருக்கும். இந்த மெத்தைக்குள் 2,500 க்கு மேற்பட்ட காற்றுத் துளைகள் உள்ளன. அதனால், வெப்பநிலையை சமச்சீராக வைத்திருப்பதுடன், மெத்தையை குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும். உறங்கும் போது உடல் அசைவுகளுக்கு ஏற்ப, ஸ்மார்ட் கிரிட் உடனடியாக மாறிக் கொள்ளும். அதனால், எந்தவிதமான தொந்தரவும் இல்லாமல் தூக்கத்தைத் தொடர முடியும். இந்த மெத்தை நீடித்து உழைக்கக் கூடியது. காலவோட்டத்தில் தொய்ந்து போய் விடாது. முதல்நாள் எப்படி இருந்ததோ, அப்படியே நீண்ட காலம் இருக்கும்.

திஸ் மார்ட் கிரிட் வகைகள்

பாகெடெட்ஸ் பிரிங் வித் கிரிட் மேட்ரஸ் மற்றும் ஃபோம் வித் கிரிட் மேட்ரஸ் வகைகளை அறிமுகம் செய்துள்ளது.  .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »