hello madras mobile banner 1200x300

மதுக்கரை மத்திய ஒன்றிய சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி…

கோவை  – கோவை மதுக்கரை மத்திய ஒன்றிய சார்பில் மதுக்கரை மார்க்கெட் பகுதியில் உள்ள அரசு சமுதாய நலக் கூடத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.  திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி ஆலோசனைப்படி  மதுக்கரை மத்திய திமுக  ஒன்றியப் பொறுப்பாளர் 
இ.பி.ஆர் (எ) அ.ராஜேந்திரன்தலைமை தாங்கினார்.


மதுக்கரை திமுக பேரூர் கழக செயலாளர் ராம்ஜி, மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினர் கேபிள் பாலு மற்றும் வார்டு செயலாளர் குருஜி மயில்சாமி ஆகியோர் முன்னிலையில்
மதுக்கரை வட்டார  குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ரூபா  சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். இவ்விழாவில் வார்டு செயலாளர் சரவணன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கமலம், மாவட்ட சார்பு அணியினர் பில்டர் ராஜேந்திரன், மகேந்திரன், தர்மராஜ்,சாவித்திரி, ராணி, *ஒன்றிய ஐடி விங்க் ஒருங்கிணைப்பாளர் கோவை பாலா மற்றும் இளைஞரணி ராஜா, சிவா மற்றும் மதன் கழக உறுப்பினர்கள்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »