hello madras mobile banner 1200x300

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 71 வது பிறந்தநாளில் மதுரை புறநகர் மாவட்டம் சோழவந்தான் சட்டமன்றம் அலங்கநல்லூர் தெற்கு ஒன்றியம் ஸ்ரீ தர்ம சாஸ்தா மற்றும் முனியாண்டி கோவிலில் மகா யாகம் மற்றும் சிறப்பு வழிபாடு…

மதுரை – பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 71 வது  பிறந்தநாளில் மதுரை புறநகர் மாவட்டம் சோழவந்தான் சட்டமன்றம் அலங்கநல்லூர் தெற்கு ஒன்றியம் ஸ்ரீ தர்ம சாஸ்தா மற்றும் முணியாண்டி கோவிலில் இந்த தேசத்திற்கு நீண்ட நாள் சேவை செய்ய நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும்  வேண்டி மகா யாகம் மற்றும் சிறப்பு வழிபாடு செய்து பொங்கல் வைத்து 500க்கும் மேற்பட்ட  ஏழைமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது .இந்நிகழ்வில்  பாஜக கிளைத்தலைவர்கள் 49 பேருக்கு கட்சி வேட்டி துண்டு வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் மாநில பொதுச்செயலாளர்  இராம. ஸ்ரீனிவாசன் மற்றும் மாவட்டத்தலைவர் மகா.சுசீந்திரன் ஆகியோர் தலைமையில் மாவட்ட பொதுச்செயலாளர் கோவிந்தமூர்த்தி, ஒன்றியத்தலைவர் சுபாஸ்சந்திரபோஸ் முன்னாள் மாவட்டத்தலைவர் சீத்தாராமன் மற்றும் காவித்தொண்டர்கள்  புடை சூழ சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர் மீனவர் மாநில செயலாளர் டாக்டர் சண்முகானந்தம் ஆவார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »