hello madras mobile banner 1200x300

கொரோனா தடுப்பூசி முகாமில் ஊசி செலுத்திக் கொள்பவர்களின் கோரிக்கை மனுக்களின் மீது முன்னுரிமை : வட்டாட்சியர் செல்வம்

திண்டிவனம் –

தமிழக அரசின் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் கோரிக்கை மனுவிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என திண்டிவனம் வட்டாட்சியர் செல்வம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர், தலைமை செயலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரது அறிவுரை மற்றும் வழிகாட்டுதலின் அடிப்படையில் கொரோனா 3வது அலையை தடுத்திட (12ஆம் தேதி) நாளை பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் திண்டிவனத்தில் நடைபெற உள்ளது. தங்களது பகுதியில் நடைபெறும் சிறப்பு தடுப்பூசி முகாமில் தங்களது குடும்பத்துடன் சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களுக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்படும் மனுக்களின் மீது முன்னுரிமை அளித்து கோரிக்கை நிறைவேற்றப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »