hello madras mobile banner 1200x300

குடிநீர் தேவைக்கு இடம் தானமாக வழங்கியவருக்கு சிங்கராஜபுரம் ஊராட்சி சார்பாக வாழ்த்துக்கள்!!

வருஷநாடு – ஆண்டிபட்டி தாலுகா, சிங்கராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட சிங்கராஜபுரம் கிராமத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் வைகை அணையிலிருந்து சிங்கராஜபுரம் ஊராட்சிக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கொண்டு வரும் பணி இனிதே தொடங்கியது. இதற்காக 25,000 லிட்டர் மற்றும் 30,000 லிட்டர் இரண்டு தரைமட்ட தொட்டி கட்ட தனது சொந்த நிலத்தில் 4 சென்ட் இடம் தானமாக வழங்கிய தங்கவேல் த/பெ. அய்யாவு நாயக்கர் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஊராட்சி சார்பாகவும் ஊர் மக்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றியினை ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ்  தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »