hello madras mobile banner 1200x300

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கொத்தூர் கிராம பகுதியை சேர்ந்த தோட்ட பணியாளர் தூக்கிட்டு தற்கொலை..

கிருஷ்ணகிரி  – கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கொத்தூர் கிராம பகுதியை சேர்ந்தவர், எல்லப்பன் ,வயது 45 இந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தோட்ட பராமரிப்பாளர் ஆக வேலை செய்து வருகிறார். இந்த சூழ்நிலையில் அடிக்கடி மது அருந்தும் பழக்கம்  இவருக்கு இருந்து வந்துள்ளது. இதனால் மனைவியுடன் அடிக்கடி வீட்டில் குடும்பத் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று ஏற்பட்ட பிரச்சினையில் மனமுடைந்த ,எல்லப்பன் ,வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »