hello madras mobile banner 1200x300

கம்பத்தில் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி பிறந்த நாள் விழா…

ஆண்டிபட்டி – உத்தமபாளையம் – தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி -ன் 71 ஆண்டு பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நடந்தது. இந்நிகழ்ச்சியில் காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி பெயரில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பொங்கல்  வைத்து வழிபட்டனர். மேலும் கம்பம் அரசமரம் தெருவில் வைக்கப்பட்டிருந்த நரேந்திர மோடி திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். 


இந்நிகழ்ச்சியில் கம்பம் நகர தலைவர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஏ. வனப்பேச்சி முன்னிலை வகித்தார். நகர பொதுச் செயலாளர் எஸ். பழனிக்குமார் வரவேற்புரை பேசினார். மற்றும் இந்நிகழ்ச்சியில் கம்பம் பகுதியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களும் நிர்வாகிகளும் கட்சித் தொண்டர்களும் ஏராளமானோர் கலந்துகொண்டு பிறந்தநாள் விழாவை கொண்டாடினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »