144 ன் கீழ் தடையை மீறியவர்கள் 189 பேர் உட்பட 291 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது

0
122

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு, தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளி ஏற்படுத்துதலை வலியுறுத்தி நாடு முழுவதும் கு.வி.மு.ச. பிரிவு 144 கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், சென்னை பெருநகரில் தடையை மீறி வெளியிடங்களில் அத்தியாவசியமின்றி சுற்றுதல், ஒன்று கூடுதல் போன்று 144 கு.வி.மு.ச. ன் கீழ் தடையை மீறுபவர்களை கண்காணித்தும் சோதனைச் சாவடிகள் அமைத்து சோதனைகள் மேற்கொண்டும் நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து காவல் உதவி ஆணையாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டும், சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணித்தும் வருகின்றனர்.
மேற்படி 144 கு.வி.மு.ச.வை நிறைவேற்றும் விதத்தில், சென்னையில் 156 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். மேலும், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள், இருசக்கர வாகன செக்டார் ரோந்து மூலம் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
அதன்பேரில், சென்னை பெருநகரில் நேற்று (26.03.2020) மாலை 06.00 மணி முதல் இன்று (27.03.2020) காலை 06.00 மணி வரையில் சென்னை பெருநகர காவல் குழுவினர் மேற்கொண்ட சோதனையில், 144 தடை உத்தரவை மீறிய குற்றத்திற்காக சென்னை பெருநகரில் 189 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதில் தொடர்புடைய 36 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் போக்குவரத்து காவல் துறையினர், குடிபோதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக 3 வழக்குகளும், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியது தொடர்பாக 158 வழக்குகளும் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 130 வழக்குகளும் என மொத்தம் 291 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here