144 தடை உத்தரவை மீறிய குற்றத்திற்காக 89 வழக்குகள்

0
36

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு,
தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளி ஏற்படுத்துதலை வலியுறுத்தி சென்னை பெருநகரம் முழுவதும் காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் 144 கு.வி.மு.ச கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி பொது இடங்களில் 5க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறுபவர்களை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சென்னையில் 147 சோதனை சாவடிகளில் போலீசார் தணிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இன்று (25.03.2020) 144 தடை உத்தரவை மீறிய குற்றத்திற்காக
C-3 ஏழுகிணறு காவல் நிலையத்தில் 1 வழக்கும், F-5 சூளைமேடு காவல் நிலையத்தில் 2 வழக்குகளும் என மொத்தம் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் உத்தரவை மீறியதற்காக K- 10 கோயம்பேடு காவல் நிலையத்தில் 1 வழக்கும், V-5 திருமங்கலம் காவல் நிலையத்தில் 1 வழக்கும், N-3 முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் 1 வழக்கும் என மொத்தம் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் போக்குவரத்து காவல் துறையினர், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 10 நபர்கள் மீதும், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 43 நபர்கள் மீதும், போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 36 நபர்கள் மீதும் என மொத்தம் 89 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here