144 தடையை மீறிய 656 பேர் உட்பட 1,859 வழக்குகள் பதிவு. 24 மார்ச் முதல் இன்று 04 ஏப்ரல் வரை 144 தடை உத்தரவை மீறிய 7,460 பேர் உட்பட 16,245 வழக்குகள் பதிவு, 7,774 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

0
109

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு, தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளி ஏற்படுத்துதலை வலியுறுத்தி நாடு முழுவதும் கு.வி.மு.ச. பிரிவு 144 கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், சென்னை பெருநகரில் தடையை மீறி வெளியிடங்களில் அத்தியாவசியமின்றி சுற்றுதல், ஒன்று கூடுதல் போன்று 144 கு.வி.மு.ச.ன் கீழ் தடையை மீறுபவர்களை கண்காணித்தும் சோதனைச் சாவடிகள் அமைத்து சோதனைகள் மேற்கொண்டும் நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின் பேரில், துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து காவல் உதவி ஆணையாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தலைமையில் கண்காணித்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
மேற்படி பிரிவு 144 கு.வி.மு.ச.வை நிறைவேற்றும் விதத்தில், சென்னையில் 106 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். மேலும், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள், இருசக்கர வாகன செக்டார் ரோந்து மூலம் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
அதன்பேரில், சென்னை பெருநகரில் இன்று (04.4.2020) காலை 06.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையில் சென்னை பெருநகர காவல் குழுவினர் மேற்கொண்ட சோதனையில், 144 தடை உத்தரவை மீறிய குற்றத்திற்காக சென்னை பெருநகரில் 656 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதில் தொடர்புடைய 249 இருசக்கர வாகனங்கள், 4 இலகு ரக வாகனம் மற்றும் 8 ஆட்டோக்கள் என மொத்தம் 261 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதே போல, போக்குவரத்து காவல் துறையினர், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியது தொடர்பாக 731 வழக்குகளும், இதர போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 472 வழக்குகளும் என மொத்தம் 1,203 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மேற்படி போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 284 இருசக்கர வாகனங்கள், 5 இலகு ரக வாகனங்கள் , 11 ஆட்டோக்கள், என மொத்தம் 300 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இது வரை, அதாவது கடந்த 24.03.2020 மாலை 6.00 மணி முதல் இன்று (04.04.2020) மாலை 6.00 வரை 144 தடை உத்தரவை மீறிய குற்றத்திற்காக 7,460 வழக்குகளும், தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவை மீறிய குற்றத்திற்காக 17 வழக்குகளும், வதந்தி பரப்புவோர் மீது 1 வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் தொடர்புடைய 3,625 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதே போல, போக்குவரத்து காவல் துறையினர், போக்குவரத்து விதிமுறைகள் மீறல் தொடர்பாக மொத்தம் 16,245 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். மேலும் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 48 இலகு ரக வாகனங்கள், 7,392 இருசக்கர வாகனங்கள், 323 ஆட்டோக்கள் மற்றும் 11 இதர வாகனங்கள் என மொத்தம் 7,774 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here