வில்லிவாக்கம் பகுதியில் மாவா மற்றும் குட்கா பாக்கெட்டுகளை விற்பனை செய்த நபர் கைது. சுமார் 2 கிலோ எடை மாவா, 37 கிலோ ஹான்ஸ் புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்

0
207

சென்னையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை வஸ்த்துக்களான மாவா, குட்கா, பான்மசாலா, ஹான்ஸ் மற்றும் போதை பாக்குகள் தயாரிப்பவர்களையும், கடைகளில் விற்பவர்களையும், கண்காணித்து கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டார். அதன்பேரில், அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அவர்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகள் மேற்கொண்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக ஏ-1 வில்லிவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (06.12.2019) அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், வில்லிவாக்கம், பிள்ளையார் கோயில் தெருவில் ரகசியமாக கண்காணித்தபோது, அங்கு ஒருவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மாவா மற்றும் குட்கா பான்மசாலா பாக்கெட்டுகளை கூஏளு ஓடு இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.
அதன்பேரில், தடை செய்யப்பட்ட மாவா மற்றும் குட்கா பான்மசாலா பாக்கெட்டுகளை விற்பனை செய்த சுரேஷ்பாபு, வ/54, த/பெ.பாலகுருநாதன், எண்.5/25, வெள்ளாளர் தெரு, வில்லிவாக்கம், சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் 2 கிலோ எடை கொண்ட மாவா, 37 கிலோ எடை கொண்ட ஹான்ஸ் புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் மற்றும் மேற்படி இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட சுரேஷ்பாபு விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here