வியாசர்பாடி பகுதியில் ஜெகன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி கைது

0
201

சென்னை, வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர், 75வது பிளாக், எண்.1860 என்ற முகவரியில் வசித்து வந்த ஜெகன், வ/24, த/பெ.மோகன் என்பவர் கடந்த 22.09.19 இரவு சுமார் 08.45 மணியளவில் அவரது வீட்டினருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, சிலர் ஜெகனை வழிமறித்து, கத்தியால் தாக்கி ஜெகனை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இது குறித்து, ஜெகனின் தந்தை மோகன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் P-5 எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதன்பேரில், எம்.கே.பி.நகர் காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, மேற்படி கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி அஜித் (எ) கருப்பு அஜித், வ/24, த/பெ.ராஜு, எண்.1080, 49வது பிளாக், சத்திய மூர்த்தி நகர், வியாசர்பாடி, சென்னை-39 என்பவரை நேற்று (23.9.2019) இரவு கைது செய்தனர்.
விசாரணையில், கடந்த 10.07.19 அன்று மேற்படி இறந்து போன ஜெகன் மற்றும் அவரது நண்பர் தினேஷ் ஆகியோர் சேர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த பாரதி என்ற பெண்ணை கத்தியால் தாக்கி காயம் ஏற்படுத்தியது தொடர்பாக P-5 எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஜெகன் மற்றும் தினேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டவர்கள் சில நாட்களுக்கு முன்பு பிணையில் வெளியே வந்தனர்.
இந்நிலையில் காயம்பட்ட பாரதி என்ற பெண்ணின் உறவினரான அஜித் (எ) கருப்பு அஜித் என்பவர் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து 22.9.2019 அன்று இரவு மேற்படி ஜெகனை கொலை செய்தது தெரியவந்தது. மேலும், விசாரணையில் கைது செய்யப்பட்ட அஜித் (எ) கருப்பு அஜித் என்பவர் P-3 வியாசர்பாடி காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது தெரியவந்தது.
விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here