வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தில் புதியதாக பொருத்தப்பட்ட 250 சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தொடங்கி வைத்தார்

0
417

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் இன்று (11.1.2020) காலை தண்டையார்பேட்டை , செல்வவாணி மகாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தில் புதிதாக பொருத்தப்பட்ட 250 கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து காவலன் SOS செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாநில நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பு தலைவர் திரு.ராஜேஷ் அவர்கள், வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தில் புதியதாக பொருத்துவதற்காக 250 சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்களை காவல் ஆணையாளரிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையர் (வடக்கு) திரு.ஆர்.தினகரன், இ.கா.ப., வடக்கு மண்டல இணை ஆணையாளர் திரு.கபில்குமார்சரத்கர், இ.கா.ப, வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் திருமதி.சுப்புலட்சுமி, உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் 800க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here