வடபழனி பகுதியில் வெளிநாட்டு சிகரெட்டு பாக்கெட்டுகள் விற்பனை செய்த நபர் கைது. 980 வெளிநாட்டு சிகரெட்டு பாக்கெட்டுகள் பறிமுதல்

0
827

சென்னையில் போதைப் பொருட்கள் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மாவா மற்றும் புகையிலை பொருட்களை வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தங்களது காவல் நிலைய எல்லை பகுதியில் கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, R-8 வடபழனி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (03.9.2019) மாலை அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த தகவலின்பேரில், காவல் குழுவினர் வடபழனி, எல்லை முத்தாலம்மன் கோயில் தெருவில் உள்ள கடையில் ரகசியமாக கண்காணித்தபோது, அங்கு ஒரு நபர் வெளிநாட்டு சிகரெட்டு பாக்கெட்டுகளை ரகசியமாக விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.
அதன்பேரில், சட்ட விரோதமாக வெளிநாட்டு சிகரெட்டு பாக்கெட்டுகளை செய்து கொண்டிருந்த குமரேசன், வ/41, த/பெ.சுப்பிரமணியன், எண்.23/14, புருஷோத்தமன் தெரு, சாலிகிராமம், சென்னை-93 என்பவரை கைது செய்தனர். அவரது கடையில் சோதனை மேற்கொண்டு, E.C.Lights, DG Agaram, Kings Gold Flake, Bugangamஆகிய வெளிநாட்டு சிகரெட்டு பாக்கெட்டுகள்-980 பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட குமரேசன் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here