வடபழனி பகுதியில் பணம் பந்தயம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது. ரூ.11,400/- மற்றும் 2 சீட்டுக்கட்டுகள் பறிமுதல்

0
683

சென்னையில் சட்டத்திற்கு புறம்பாக பணம் பந்தயம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன் பேரில், அந்தந்த காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து சோதனை செய்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, R-8 வடபழனி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (30.10.2019) மாலை சுமார் 03.30 மணியளவில் அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், வடபழனி, ஆற்காடு ரோட்டில் உள்ள தனியார் கிளப் மற்றும் கோடம்பாக்கம், சம்பூரண அவென்யூவில் உள்ள தனியார் கிளப் ஆகிய இரண்டு கிளப்களை கண்காணித்த போது அங்கு சிலர் சீட்டுக்கட்டுகளுடன் பணம் பந்தயம் வைத்து சூதாடுவது தெரியவந்தது.
அதன்பேரில் மேற்படி இடத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 1.கஜபதி, வ/60, த/பெ.பங்காருரெட்டி, எண்.6/18, பொன்னியம்மன் கோயில் தெரு, சாலிகிராமம் 2.முருகன், வ/53, த/பெ.சாமிநாதன், எண்.2, பாரதி நகர் 2வது தெரு, ஆவடி 3.சங்கர், வ/55, த/பெ.பெரியய்யா, எண்.20/20, பாரதி தெரு, ஈக்காட்டுதங்கால் 4.நாகராஜ், வ/60, த/பெ.நாகேந்திரன், எண்.23/45, சிவன் கோயில் தெரு, வடபழனி 5.சிவசுப்பிரமணியம், வ/60, த/பெ.செல்லதுரை, எண்.23/34, சிவன் கோயில் தெரு, கொளத்தூர் 6.துரை, வ/69, த/பெ.கணபதி, எண்.20, ஜோன்ஸ் ரோடு, சைதாப்பேட்டை 7.ஸ்ரீவன், த/பெ.ஜோஷ், வடபழனி, 8.அஸ்லாம், வ/44, நூர்முகமது, வடபழனி 9.தண்டபாணி, வ/40, த/பெ.கருணாகரன், மேடவாக்கம் 10.அன்னியப்பன், வ/40, த/கோவிந்தன், வாலஜாபாத் 11. பாண்டியப்பன், த/பெ.கண்ணன், சிவகங்கை 12.ராஜா, வ/53, த/பெ.சாமுவேல், மேடவாக்கம் ஆகிய 12 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் ரூ.11,100/- மற்றும் சீட்டுக்கட்டுகள்-2 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here