வடபழனி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த இரண்டு நபர்கள் கைது. 86 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

0
35

சென்னையில் போதைப் பொருட்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களையும், கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன் பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தங்களது காவல் நிலைய எல்லை பகுதியில் கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, R-8 வடபழனி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (4.07.2019) அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காமாட்சி அம்மன் காலனி அருகே கண்காணித்த போது அங்கு இருவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் புகையிலைப்பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது.
அதன்பேரில் மேற்படி இடத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த 1.முகமது இப்ராஹிம், வ/38, த/பெ.சையத்மீராசர், எண்.4/92, மேல தெரு, தொண்டி கிராமம், ராமநாதபுரம் மாவட்டம் 2.முகமதுயாசர், வ/22,த/பெ.அப்துல் ஜாகீர், எண்.1/19, காமாட்சி அம்மன் காலனி, வடபழனி ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 86 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here