வங்கியில் கடன் வாங்கித் தருவதாக கூறி நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட வழக்கில் மேலும் இருவர் கைது

0
454

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த பரத்குமார், வ/29, த/பெ.ரவிக்குமார் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையிலும் மற்றும் பல்வேறு பிரபலமான நிதி நிறுவனத்திலிருந்து பேசுவதாக தொலைபேசியின் மூலம் தொடர்புகொண்டு லட்சக்கணக்கில் லோன் தருவதாக கூறி, அதனை செயல் முறைப்படுத்த வங்கி கணக்கு எண், டெபிட் கார்டு எண் மற்றும் வங்கியின் ரகசிய விவரங்களை பெற்றுக்கொண்டும், தொலைபேசிக்கு வரும் ரகசிய எண்னையும் பெற்றுக்கொண்டு, ஆன்லைன் மூலம் மோசடி செய்வதாக பெறப்படும் புகரர்களின் அடிப்படையிலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் அ.கா.விசுவநாதன், இ.கா.ப. அவர்கள் இவ்வாறாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து தினந்தோறும், வங்கியில் கடன் வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறி நடைபெறும் மோசடி சம்மந்தமான புகார் மனுக்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய குற்றப்பிரிவின் கூடுதல் ஆணையாளர் திரு.C.ஈஸ்வரமூத்தி, இ.கா.ப., அவர்களுக்கு உத்தரவிட்டதன்பேரில், துணை ஆணையாளர் திருமதி.G.நாகஜோதி, அவர்களின் மேற்பார்வையில், கூடுதல் துணை ஆணையாளர், திரு.K.சரவணக்குமார், அவர்களின் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் திரு.P.கந்தவேல், திரு.சுரேஷ்குமார் மற்றும் திரு.துரை ஆகியோர்கள் உள்ளிட்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

மத்திய குற்றப்பிரிவு, வங்கி மோசடி தடுப்புப்பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தனிப்படையினர் தீவிர விசாரணையில் தாம்பரம், வேங்கைவாசல் அருகே உள்ள சித்தாலப்பாக்கம் என்ற இடத்தில் வங்கியின் பெயரால் கடன் வாங்கிக் கொடுப்பதாக Call Centre நடத்தி வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், திரு.ஜேக்கப் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில், முதல் மற்றும் 2-ம் தளத்தில் சோதனை மேற்கொள்ளும்போது, மோசடியில் ஈடுபட்ட 1) மணிகண்டன் ஆ/வ 26 த/பெ.சேகர், 2) முத்துக்குமார் ஆ/வ 27, த/பெ. பாண்டியன், 3) சிலம்பரசன் ஆ/வ 23, த/பெ.ரவி. 4) சர்மிளா (எ) ரியா பெ/வ.32, க/பெ.சாலமன், 5) முகமது இஸ்மாயில் ஆ/வ 21, த/பெ. அப்துல் காதர் 6)ஆகாஷ் ஆ/வ 21, த/பெ.ஏழுமலை, 7)R.வித்யாசாகர் (எ) வினித் ஆ/வ 20, த/பெ.ரவிச்சந்திரன், 8) முத்துராஜ் ஆ/வ 21, த/பெ. பாண்டியன், மற்றும் Call Centre வேலைக்கு பொதுமக்களுக்கு கடன் வேண்டுமா என்று கேட்டு அவர்களின் தொலைபேசி எண்களை பெற்று மணிகண்டனிடம் தெரிவிப்பதற்காக பணியமர்த்தப்பட்ட 9) லட்சுமி, பெ/வ 27 க/பெ. சுரேஷ்குமார், 10)ஜீவரத்தினம், பெ/வ27, க/பெ. மணிகண்டன், 11)மஹாலட்சுமி, பெ/வ-22 த/பெ. தட்சிணாமூர்த்தி 12) ஐஸ்வர்யா பெ/20, த/பெ.மணி என்பவர்கள் ஒன்று கூடி 23 தொலைபேசி உபகரணங்கள், 2-Laptop-கள் வைத்து மோசடியில் ஈடுபட்டிருந்தபோது சுற்றி வளைத்து, கடந்த 14.10.2019 அன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனை தொடர்ந்து மேற்படி தனிப்படையினர் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட 1) சிவராமன் ஆ/வ 25 த/பெ.கணேஷ்பாண்டியன், எண்.2/175, அம்மன் கோவில் தெரு, புத்தன் தருவை கிராமம், சாத்தான் குளம் தாலுகா, தூத்துக்குடி மாவட்டம் அவரது தம்பி 2) முத்துராமன் ஆ/வ 21 , த/பெ. கணேஷ் பாண்டியன், எண்.2/175, அம்மன் கோவில் தெரு, புத்தன் தருவை கிராமம், சாத்தான் குளம் தாலுகா, தூத்துக்குடி மாவட்டம் ஆகிய இருவரை நேற்று (22.10.2019) கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் விசாரணையில் பொதுமக்களின் செல்போன் தரவுகளை திரட்டி Just dial, PayU Money, Play Games, Payments Pay, Paytm, Tech Process Payments, Mumbai மற்றும் தங்களது வங்கிக்கு பணத்தை மாற்றி நூதன முறையில் மோசடி செய்துவருவதாக தெரியவந்துள்ளது.

மேற்படி மோசடியில் Call Centre வைப்பதற்க்கு தக்க அனுமதி இல்லாமல் பொதுமக்கள் அதிக வாடகைக்காக இது போன்ற Call Centre நடத்த அனுமதிப்பதால் இவ்வகைக் குற்றங்கள் நடக்க ஏதுவாகின்றது. மேலும் பொது மக்கள் எந்த வகையில் யார் பேசினாலும், லோன் வாங்கித் தருவதாகவோ, கிரெடிட் கார்டு லிமிட் அதிகப்படுத்திக் தருவதாகவோ, கிரெடிட் கார்டுக்கு ரிவார்டு பாயிண்ட் வந்திருப்பதாகவோ, வேலை வாங்கி தருவதாகவோ, OLX-ல் விற்பது வாங்குவது தொடர்பாகவோ, தங்களுடைய டெபிட் கிரிடிட் கார்டு எண்களையும் ரகசிய குறியீட்டு எண்களையும் தெரிவிக்ககூடாது. மேலும் தனி நபர் ஒருவரின் வங்கிக்கணக்கின் விவரங்களை ஒருவர் கேட்கிறார் என்றாலே அவர் ஏமாற்ற வேண்டும் என்ற கெட்ட நோக்கத்தோடுதான் கேட்கிறார் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும். குறைந்தது 3 மாதங்களுக்கு ஒரு முறையேனும் ரகசிய குறியீட்டு எண்ணை மாற்றுமாறும், எந்த லிங்க்கையும், டவுண்லோடு செய்யக்கூடாது என்றும், தெரிவித்து பொதுமக்கள் எச்சரிக்கையோடு இருக்க சென்னை மாநகர காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here