ராயலாநகர் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை திருடிய நபர் கைது. 1 இருசக்கர வாகனம் பறிமுதல்

0
429

சென்னை, ராமாபுரம், ஸ்ரீராம்நகர், முதல் குறுக்கு தெரு, எண்.5/2 ஏ, என்ற முகவரியில் கருணாகரன், வ/43, த/பெ.செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். கருணாகரன் கடந்த 14.1.2020 அன்று மதியம் தனது Suzuki Access இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரத்திற்கு பிறகு திரும்ப வந்து பார்த்த போது, அவரது இருசக்கர வாகனத்தை யாரோ திருடிச்சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து கருணாகரன் ஆர்-11 ராயலாநகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.

ஆர்-11 ராயலாநகர் காவல் நிலைய போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். மேலும் சம்பவயிடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட பன்னிராஜா (எ) ராஜா, வ/25, த/பெ. ஜெகநாதன், எண்.2/27, மதுரம்நகர், ஐயப்பன்தாங்கல் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட பன்னிராஜா (எ) ராஜா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here