ராயப்பேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 நபர்கள் கைது.

0
153

சென்னையில் போதைப் பொருட்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களையும், கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தங்களது காவல் நிலைய எல்லை பகுதியில் கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, E-2 ராயப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (12.09.2019) அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், ராயப்பேட்டை, ஐயம்பெருமாள் தெரு, எண்.37/2 என்ற முகவரியில் உள்ள வீட்டை சோதனை செய்த போது அங்கு பெருமளவில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் ஹான்ஸ் புகையிலைப்பொருட்களை பதுக்கி வைத்து ரகசியமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
அதன்பேரில் மேற்படி வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 1.ஷாகுல் ஹமீது, வ/31, த/பெ.ஹயாத் பாட்ஷா, எண்.37/2, முத்தையா முதலி தெரு, திருவல்லிக்கேணி 2.வேணுகோபால், வ/48, த/பெ. வெங்கடசுப்பையா, எண்.24/13, ஹாஜி ஷேக் முகேன் தெரு, ராயப்பேட்டை ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 311 கிலோ தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா புகையிலைப்பொருட்கள், ரொக்கம் ரூ.8,190, 2 செல்போன்கள் மற்றும் 1 இருசக்கரவாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here