முத்தியால்பேட்டை பகுதியில் மதுபாட்டில்கள் விற்பனை செய்த 3 பெண்கள் மற்றும் ஒரு திருநங்கை கைது. 145 மதுபாட்டில்கள் பறிமுதல் மீன்பிடிதுறைமுகம் மற்றும் வண்ணாரப்பேட்டையில் மதுபாட்டில்கள் விற்ற ஒரு பெண் உட்பட 4 பேர் கைது. 75 மதுபாட்டில்கள் பறிமுதல்

0
474

சென்னையில் போதைப் பொருட்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களையும், சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தங்களது காவல் நிலைய எல்லை பகுதியில் கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, N-3 முத்தியால்பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (16.01.2020) காலை பணியிலிருந்த போது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், பிராட்வே, புனித சேவியர் தெருவில் கண்காணித்தபோது, அங்கு 2 பெண்கள் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.

அதன்பேரில், மேற்படி இடத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த 1.பானு, பெ/வ.30, க/பெ.முருகன், எண்.47, பி.ஆர்.என்.கார்டன், பிராட்வே, 2.வனிதா, பெ/வ.32, க/பெ.ரமேஷ், எண்.5, புனித சேவியர் தெரு, பிராட்வே, ஆகிய 2 பெண்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 180 மி.லி அளவு கொண்ட 68 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், இதே காவல் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, பிராட்வே, ஜீல்ஸ் தெருவில் ரகசியமாக மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த அமுதா, பெ/வ. 40, க/பெ.கோபால், எண்.12, ஜீல்ஸ் தெரு, பிராட்வே என்பவரை கைது செய்து, 45 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதே போல, புனித சேவியர் தெருவில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த சரண்யா (எ) சதிஷ், வ/24, (திருநங்கை), த/பெ.சேகர், எண்.5, புனித சேவியர் தெரு என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 180 மி.லி. அளவு கொண்ட 32 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், N-4 மீன்பிடி துறைமுகம் காவல்நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (16.01.2020) புதுவண்ணாரப்பேட்டை, அண்ணாநகர் 23வது தெருவில் ரகசியமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்த பரமு (எ) பரமேஸ்வரி, பெ/வ.56, க/பெ.குப்பன், எண்.19, அண்ணாநகர் 22வது தெரு, புதுவண்ணாரப்பேட்டை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 180 மி.லி. அளவு கொண்ட 40 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

H-1 வண்ணாரப்பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (16.01.2020) போஜராஜன் நகர், அட்டிங் கிரவுண்ட் அருகில் ரகசியமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்த 1.சக்திவேல், வ/22, த/பெ.சசிகுமார், போஜராஜன் நகர், பழைய வண்ணாரப்பேட்டை, 2.ஜெகன், வ/24, த/பெ. சுகுமார்,போஜராஜன் நகர், 3.முனியப்பன், வ/51, த/பெ.சின்னசாமி, போஜராஜன் நகர், வண்ணாரப்பேட்டை ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 180 மி.லி. அளவு கொண்ட 35 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here