மாதவரம் பகுதியில் உறங்கிக் கொண்டிருந்த லாரி ஓட்டுநரின் செல்போன் மற்றும் பணத்தை திருடிய நபர் கைது. செல்போன் மற்றும் ரூ.450 பறிமுதல்

0
1039

கடலூர் மாவட்டம், குண்டையமல்லூர் பகுதியைச் சேர்ந்த எழிலரசன், வ/24, த/பெ. கலியமூர்த்தி என்பவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். எழிலரசன் வேலை நிமித்தமாக TN18 AA 5050 பதிவெண் கொண்ட லாரியை ஓட்டிக் கொண்டு, 27.8.2019 அன்று இரவு சென்னை, மாதவரம், மஞ்சம்பாக்கம் லாரி நிறுத்துமிடத்தில் மேற்படி லாரியை நிறுத்தி உறங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது அதிகாலை சுமார் 03.50 மணியளவில் (28.8.2019) யாரோ ஒரு மர்ம நபர் எழிலரசனின் செல்போன் மற்றும் பணம் ரூ.450/- ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பியபோது, சத்தம் கேட்டு எழிலரசன் எழுந்து பார்த்து சத்தம் போட்டுக் கொண்டே அந்த நபரை துரத்திச் சென்று, மற்ற லாரி ஓட்டுநர்கள் உதவியுடன் அந்த நபரை பிடித்து, செல்போன் மற்றும் பணத்துடன் M-2 மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
மாதவரம் பால்பண்ணை காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்ததில் பிடிபட்ட நபர் அஜித், வ/20, த/பெ.சம்பா, எண்.1/472, பாலகணேசன் நகர் 1வது தெரு, செங்குன்றம் என்பதும், மேற்படி லாரி ஓட்டுநர் எழிலரசனின் செல்போன் மற்றும் பணத்தை திருடியதும் தெரியவந்தது. அதன்பேரில், குற்றவாளி எழிலரசன் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து புகார்தாரரின் செல்போன் மற்றும் பணம் ரூ.450/- ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட அஜித் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here