மாங்காடு மற்றும் நுங்கம்பாக்கம் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது. 4.6 கிலோ கஞ்சா பறிமுதல்

0
78

சென்னையில் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்களை அதிகரித்து, அதிக அளவில் வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ள சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன்பேரில் அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணித்தும், வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக T-14 மாங்காடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (04.10.2019) ரோந்து பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், மௌலிவாக்கம், கோவிந்தராஜ் தெரு அருகில் கண்காணித்தபோது, அங்கு உள்ள வீட்டில் ஒருவர் கஞ்சா பதுக்கி வைத்து ரகசியமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அதன்பேரில், மேற்படி வீட்டில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த வினோத்குமார், வ/25, த/பெ.ஆறுமுகம், எண்.2/81, முதல் தெரு, கோவிந்தராஜ் நகர், மௌலிவாக்கம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 2 கிலோ 500 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட வினோத்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
இதே போல, F-3 நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (04.10.2019) காலை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, எல்லையம்மன் கோயில் அருகே ரகசியமாக கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்து கொண்டிருந்த வடிவேல் (எ) வேலுபாய், வ/40, த/பெ.காசி, எண்.24, மேற்குமாட வீதி, நுங்கம்பாக்கம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 2 கிலோ 100 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட வடிவேல் (எ) வேலுபாய் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here