மாங்காடு பகுதியில் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த 2 நபர்கள் கைது. 1.5 டன் எடையுள்ள குட்கா பறிமுதல்

0
48

சென்னையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை வஸ்த்துக்களான மாவா, குட்கா, பான் மசாலா, ஹான்ஸ் மற்றும் போதை பாக்குகள் தயாரிப்பவர்களையும், கடைகளில் விற்பவர்களையும், கண்காணித்து கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டார். அதன்பேரில், அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அவர்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகள் மேற்கொண்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக T-14 மாங்காடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (24.11.2019) குன்றத்தூர், நான்கு ரோட்டில் உள்ள பெட்டிக்கடையை சோதனை செய்த போது அங்கு தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலைப்பொருட்களை பெருமளவில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
அதன்பேரில் மேற்படி கடையில் குட்கா புகையிலைப்பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த கடையின் உரிமையாளர் சுந்தரேசன், வ/42, த/பெ.கருப்பண்ணன், மூகாம்பிகை நகர், 3வது தெரு, கோவூர் என்பவரை கைது செய்தனர். மேலும் சுந்தரேசனுக்கு குட்கா புகையிலைப் பொருட்களை சப்ளை செய்த கருப்பசாமி, வ/41, த/பெ.முருகேசன், எண்.11/182, பஞ்சாட்சரம் நகர், சின்னப்பணிச்சேரி, மாங்காடு என்பவரையும் கைது செய்தனர். மேலும் குடோனில் பதுக்கிவைத்திருந்த 1 .5 டன் எடையுள்ள குட்கா புகையிலைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here