மாங்காடு பகுதியில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபர் கைது. ரூ.1,140/- மற்றும் துண்டு சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது

0
607

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்கும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன் பேரில், உதவி ஆணையர்களின் நேரடி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக T-14 மாங்காடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (30.10.2019) அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், மாங்காடு, வடக்கு மலையம்பாக்கம், செம்பரம்பாக்கம் ஏரி அருகில் ரகசியமாக கண்காணித்தபோது, அங்கு இருவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை துண்டு காகிதத்தில் எழுதி கொடுத்து ரகசியமாக விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.
அதன்பேரில் , தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த 1.ஐயப்பன், வ/43, த/பெ.விநாயகம், எண்.2/4, திருநகர், 1வது தெரு, வடபழனி 2.கிஷோர், வ/33, த/பெ.பாபு, எண்.4/7, அகரம் மேல் கிராமம், நசரத்பேட்டை ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் ரூ.1,140/- மற்றும் துண்டு காகித சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட 2 நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here