மதுரவாயல் பகுதியில் டாடா ஏஸ் வாகனத்தை திருடிய நபர் கைது. டாடா ஏஸ் வாகனம் பறிமுதல்

0
403

சென்னை, அகரம், ஸ்கூல் தெரு, எண்.1/6 என்ற முகவரியில் கார்த்திக், வ/31, த/பெ.ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக டாடா ஏஸ் வாகனத்தை வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 15.10.2019 அன்று தனது டாடா ஏஸ் வாகனத்தை (TN 20 CX 0353) தனது வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். மறுநாள் காலை திரும்பி வந்து பார்த்த போது மேற்படி டாடா ஏஸ் வாகனத்தை யாரோ திருடிச்சென்றது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கார்த்திக் T-4 மதுரவாயல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
T-4 மதுரவாயல் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை செய்து மேற்படி டாடா ஏஸ் வாகனத்தை திருடிய ரமேஷ், வ/30, த/பெ.ராமன், எண். 543, பாரதி தெரு, ஐயப்பன்தாங்கல் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து டாடா ஏஸ் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட ரமேஷ் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here