மணலி மற்றும் அயனாவரம் பகுதிகளில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 2 நபர்கள் கைது. ரூ.1,860/-, செல்போன் மற்றும் துண்டு காகித சீட்டுகள் பறிமுதல்

0
417

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்கும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன்பேரில், உதவி ஆணையாளர்களின் நேரடி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, M-6 மணலி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (30.8.2019) மாலை அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், அம்பேத்கர் தெருவில் ரகசியமாக கண்காணித்த போது, அங்கு ஒருவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை துண்டு காகிதத்தில் எழுதி விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.
அதன்பேரில், மேற்படி இடத்தில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த பில்லப்பன், வ/57, த/பெ.கண்ணப்பன், எண்.65, டாக்டர் அம்பேத்கர் தெரு, மணலி, சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.1,560/-, செல்போன்-1 மற்றும் துண்டு காகித சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதே போல, K-2 அயனாவரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (30.8.2019) மாலை , அயனாவரம், சோலை தெருவில் உள்ள ஒரு டீக்கடை அருகில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை துண்டு காகிதத்தில் எழுதி கொடுத்து விற்பனை செய்து கொண்டிருந்த சீதாராமன், /55, த/பெ.முனுசாமி, எண்.31/69, ஏழுமலை தெரு, அயனாவரம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து பணம் ரூ.300/- மற்றும் துண்டு காகித சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட மேற்படி 2 நபர்களும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here