மக்கள் நீதி மய்யம் கோபிசெட்டிபாளையத்தில் கடை வீதி மற்றும் தினசரி மார்க்கெட்டில் மக்களின் பயன்பாட்டிற்கு சானிடைசர் ஸ்டாண்ட் வைக்கும் நிகழ்வு மாவட்ட செயலாளர் ஜி.எல்.எம். சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது

0
42

மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் டாக்டர் ஆர். மகேந்திரன் மற்றும் கோவை மண்டல செயலாளர் ஏ. ரங்கநாதன் ஆலோசனைப்படி, ஈரோடு வடகிழக்கு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி சார்பில் கடை வீதி மற்றும் தினசரி மார்க்கெட்டில் மக்களின் பயன்பாட்டிற்கு சானிடைசர் ஸ்டாண்ட் வைக்கும் நிகழ்வு மாவட்ட செயலாளர் ஜி.எல்.எம். சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கோபி நகர செயலாளர் ஜி.சி.சிவக்குமார், கோபி ஒன்றிய செயலாளர் என்.கே.பிரகாஷ், நற்பணி இயக்க அணி மாவட்ட செயலாளர் ஜி.பி.கார்த்திகேயன், மாவட்ட மகளிர் அணி சுதா செல்வராஜ், கோபி சட்டமன்ற ஒருங்கிணைப்பு என்.கே.சக்தி, சமூக ஊடகம் மற்றும் தகவல் தொழில் நுட்ப அணி நகர செயலாளர் நா.முத்துகுமார், பாரியூர் ஊராட்சி கே.ஜி.சரவணன், கலிங்கியம் ஊராட்சி கே.வேலுச்சாமி, வழக்கறிஞர் அணி ஜி.என்.நவீன்குமார், கோபி நகரம் பிரதீப்குமார், சி.மணிகண்டன், கீவர், லோகேஷ்வரலிங்கம், மகளிர் அணி சாந்தாமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here