போரூர் அருகே உயர்மின் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற நபரை சாமர்த்தியமாக பேசி கீழே இறக்கி காப்பாற்றிய நுண்ணறிவுப்பிரிவு தலைமைக் காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்

0
639

கடந்த 09.11.2019 அன்று இரவு சுமார் 09.00 மணியளவில் சென்னை, போரூர் ஏரி அருகே உள்ள உயர் அழுத்த மின்கோபுரத்தில் ஒரு வாலிபர் ஏறி தற்கொலைக்கு முயல்வதாகவும், பொதுமக்கள் அங்கு கூடியுள்ளதாகவும், கிடைத்த தகவலின்பேரில், உடனே, அங்கு சென்ற T-15 SRMC காவல் நிலைய நுண்ணறிவுப்பிரிவு தலைமைக் காவலர் B.டார்வின் (த.கா. 36600) என்பவர் அந்த நபரிடம் பேசி தீர்த்துக் கொள்ளலாம் கீழே இறங்கி வா என அறிவுரைகள் கூறி சிறிது சிறிதாக அந்த நபரின் எண்ணத்தை மாற்றி கீழே இறங்க வைத்தார்.
விசாரணையில், தற்கொலைக்கு முயன்ற நபர் பாண்டி (எ) செல்ல பாண்டி , வ/32, த/பெ.தெய்வம், சிவன் கோயில் தெரு, போரூர் என்பதும், இவருக்கு யோகேஸ்வரி என்ற மனைவியும், 7 வயது மகன் மற்றும் 10 மாத ஆண் குழந்தை உள்ளதும், வெல்டிங் வேலை செய்து வரும் செல்ல பாண்டிக்கு குடிப்பழக்கம் உள்ளதால், அடிக்கடி மனைவியுடன் தகராறு ஏற்படும் நிலையில் சம்பவ தினத்தன்று (09.11.2019) மனைவியுடன் தகராறு ஏற்பட்டதால், செல்லபாண்டி குடித்துவிட்டு, மேற்படி உயரழுத்த மின் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது. பின்னர் செல்லபாண்டியிடம் T-15 SRMC காவல் நிலைய போலீசார் மற்றும் நுண்ணறிவுப்பிரிவு தலைமைக்காவலர் டார்வின் செல்லபாண்டிக்கு அறிவுரைகள் கூறி, செல்லபாண்டியை அவரது வீட்டில் பத்திரமாக சேர்க்கப்பட்டார்.
குடிபோதையில் உயர்மின் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற நபரை சாமர்த்தியமாக பேசி கீழே இறக்கி காப்பாற்றிய T-15 SRMC காவல் நிலைய நுண்ணறிவுப்பிரிவு தலைமைக் காவலர் B.டார்வின் (த.கா. 36600) என்பவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா. விசுவநாதன், இ.கா.ப அவர்கள் இன்று (11.11.2019) நேரில் அழைத்து பாராட்டி, வெகுமதி வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here