பொங்கல் திருநாளை முன்னிட்டு அண்ணா நகர் காவலர் குடியிருப்பு, ஆவடி மற்றும் புனித தோமையர் மலை ஆயுதப்படை மைதானத்தில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் பொங்கல் விழா கொண்டாடினார்

0
383

சென்னையில், அண்ணாநகர் காவலர் குடியிருப்பு, ஆவடி டீஊகு மைதானம் மற்றும் புனித தோமையர் மலை ஆயுதப்படை வளாகம் ஆகிய 3 இடங்களில் இன்று (14.01.2019) நடைபெற்ற காவலர்கள் குடும்பத்தினரின் பொங்கல் விழாக்களில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன் இ.கா.ப அவர்கள் கலந்து கொண்டார்.

காவலர் குடும்பத்தினரைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர்கள் மற்றும் காவலர்களுக்காக நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளை காவல் ஆணையாளர் மற்றும் உயர் அதிகாரிகள் பார்த்து ரசித்தனர். பின்னர், இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் பரிசுகள் வழங்கிப் பாராட்டி அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர் (தலைமையிடம்) திருமதி.சீமா அகர்வால், இ.கா.ப., கூடுதல் ஆணையாளர்கள் திரு.ஆர்.தினகரன், இ.கா.ப, (வடக்கு), திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா, இ.கா.ப, (தெற்கு), இணை ஆணையாளர்கள் திரு.கபில்குமார்சரத்கர், இ.கா.ப, (வடக்கு மண்டலம்), திருமதி. பி.விஜயகுமாரி,இ.கா.ப., (மேற்கு மண்டலம்), திருமதி.சி.மகேஸ்வரி,இ.கா.ப., திரு.ஏ.ஜி.பாபு, இ.கா.ப., (தலைமையிடம்), காவல் துணை ஆணையாளர்கள், காவல் அதிகாரிகள் காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here