பேரறிஞர் அண்ணா 51வது நினைவு நாளையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி

0
130

பேரறிஞர் அண்ணா 51வது நினைவு நாளையொட்டி தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின்  அவர்கள் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்று, பேரணியின் இறுதியில் அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பேரறிஞர் அண்ணா அவர்களின் 51வது நினைவு நாளினையொட்டி கழகத் தலைவர்  மு.க.ஸ்டாலின்  அவர்கள் தலைமையில் கழக முன்னணியினருடன் இன்று (3-2-2020) காலை  அமைதிப் பேரணி புறப்பட்டு வாலாஜா சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அருகிலிருந்து புறப்பட்டு, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி  செலுத்தினார்.

முகநூல் பதிவு:

மேலும் பத்ம விருது பெறும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்! அரசியல் அறத்தைப் போதித்த காஞ்சி தந்த வள்ளுவன்-கொள்கை உரத்தை ஊட்டிய இந்நூற்றாண்டின் தலைவன்-பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 51வது நினைவுநாள் இன்று!அவரை மறந்தால் அல்லவா நினைப்பதற்கு?அவரது குரலும், கொள்கையும், கோட்பாடும் வாழ்க்கையும், வாழ்த்தும் என்றும் நம்மை இயக்கிக் கொண்டு இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here