பேசின் பாலம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த இரண்டு நபர்கள் கைது. 30 மதுபாட்டில்கள் பறிமுதல்

0
82

சென்னையில் போதைப் பொருட்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களையும், சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன் பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையில் காவல் குழுவினர் அவர்களது காவல் நிலைய எல்லை பகுதியில் கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து கைது செய்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, P-4 பேசின் பாலம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (11.02.2020) காலை அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த தகவலின் பேரில், ராஜாதோட்டம், 2 வது தெரு, குருசாமி நகர் மெயின் ரோட்டில் ரகசியமாக கண்காணித்த போது, அங்கு இருவர் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து ரகசியமாக விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.

அதன்பேரில், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த 1. தேவி, வ/41, க/பெ.செந்தில்குமார், எண்.9, 7வதுதெரு, கே.எம்.கார்டன், புளியந்தோப்பு 2.சூர்யா, வ/24, த/பெ.சிவக்குமார், எண்.18, ராஜா தோட்டம் 3வது தெரு, புளியந்தோப்பு ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 180 மி.லி.அளவு கொண்ட 30 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட மேற்படி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here