பூந்தமல்லி பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் ஒருவர் கைது. 1 இருசக்கர வாகனம் பறிமுதல்

0
549

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, நாலட்டின்புதூர் என்ற முவரியைச்சேர்ந்த வள்ளிமுத்து, வ/35, க/பெ.அருள்சாமி, என்பவர், பூந்தமல்லியில் உள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக கடந்த 01.10.2019 அன்று இரவு சுமார் 09.00 மணியளவில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் மேற்படி வள்ளிமுத்து கழுத்தில் அணிந்திருந்த 4 கிராம் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து வள்ளிமுத்து பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், விசாரணை மேற்கொண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேலும், பூந்தமல்லி குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், அப்பகுதியில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தும், அருகிலிருந்தவர்களிடம் விசாரணை செய்தும் மேற்படி செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட ராஜேஷ், வ/20, த/பெ.கணபதி, எண்.568, முதல் தெரு, ஜெ.ஜெ.நகர், வெற்றிலைத் தோட்டம், பூந்தமல்லி என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் ராஜேஷ் மீது ஏற்கனவே பல குற்றவழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. மேற்படி செயின்பறிப்பு சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
கைது செய்யப்பட்ட ராஜேஷ் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்பபடி சிறையில் அடைக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here