பூக்கடை பகுதியில் தனியார் கிளப்பில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 31 நபர்கள் கைது. பணம் ரூ.1,50,625/- மற்றும் 3 சீட்டுக்கட்டுகள் பறிமுதல்

0
54

சென்னையில் சட்டத்திற்கு புறம்பாக பணம் பந்தயம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன் பேரில் அந்தந்த காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து சோதனை செய்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, சி-1 பூக்கடை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (23.11.2019) அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், டி.என்.பி.எஸ்.சி சாலையில் உள்ள ஒரு தனியார் கிளப்பை கண்காணித்தபோது, அங்கு சிலர் சீட்டுக்கட்டுகளுடன் பணம் பந்தயம் வைத்து சூதாடுவது தெரியவந்தது. அதன்பேரில் மேற்படி இடத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட கிளப் மேலாளர் வில்லியம், வ/58, த/பெ. பென்வில், பூக்கடை, மேற்பார்வையாளர் தண்டபாணி, வ/58, த/பெ.ராமதாஸ், அரும்பாக்கம், உட்பட 31 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, ரொக்கம் ரூ.1,50,625/- மற்றும் 3 சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here