புழல் பகுதியில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்துச் சென்ற பழைய குற்றவாளி கைது

0
594

சென்னை, சூளை, ஆண்டியப்பன் தெரு, எண்.27 என்ற முகவரியில் தேவகுமார், வ/38, த/பெ.சங்கிலி என்பவர் வசித்து வருகிறார். தேவகுமார் நேற்று (06.09.2018) மதியம் 12.30 மணியளவில் பொன்னேரி ரெட்ஹில்ஸ் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த நபர் ஒருவர் மேற்படி தேவகுமாரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த பணம் ரூ.2,000/- பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து தேவகுமார் M-3 புழல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
M-3 புழல் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்ததில், மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டது பழைய குற்றவாளி என தெரியவந்தது. அதன்பேரில், காவல் குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு மேற்படி வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளி சந்திரகுமார், வ/33, த/பெ.ஏழுமலை, எண்.112, பெருமாள் கோயில் தெரு, அருமந்தை, சோழவரம் என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்டசந்திரகுமார் என்பவர் M-3 புழல் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது ஒரு கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட சந்திரகுமார் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here