புளியந்தோப்பு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பெண் உட்பட 2 பேர் கைது. 4 கிலோ கஞ்சா பறிமுதல்

0
77

சென்னையில் குற்றவாளிகளை கைது செய்யவும், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்களை அதிகரிக்கவும், அதிக அளவில் வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளவும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன்பேரில், அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் தலைமையில் சுற்றுக் காவல் ரோந்து அதிகரித்தும், வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, P-1 புளியந்தோப்பு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (26.2.2020) காலை அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், கன்னிகாபுரம், தாஸ் நகர் 8வது தெருவில் கண்காணித்தபோது, அங்கு ஒரு பெண் மற்றும் மற்றொரு நபர் ரகசியமாக கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்தது தெரியவந்தது.

அதன்பேரில், மேற்படி இடத்தில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 1.பத்மா, பெ/வ.45, க/பெ.பிரபாகரன், எண்.57, தாஸ் நகர் 8வது தெரு, கன்னிகாபுரம், சென்னை, 2.ராஜேஷ் (எ) கருப்பு ராஜேஷ், வ/33, த/பெ.கருணாகரன், எண்.261, 1வது பிளாக், B.S. மூர்த்தி நகர், புளியந்தோப்பு, சென்னை ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here