புதுவண்ணாரப் பேட்டையில் நடந்த பொதுமக்கள் சிறப்பு குறை தீர்ப்பு முகாமினை காவல் ஆணையாளர் அவர்கள் துவக்கி வைத்தார்

0
806

சென்னை பெருநகரில் வசிக்கும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் நடத்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டார். அதன்பேரில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் முனைவர் ஆர்.தினகரன், இ.கா.ப (வடக்கு) மற்றும் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா,இ.கா.ப., (தெற்கு) போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையாளர் திரு.ஏ.அருண், இ.கா.ப., ஆகியோர் மேற்பார்வையில், சென்னை பெருநகர காவல் 4 மண்டல இணை ஆணையாளர்கள் மற்றும் 2 போக்குவரத்து இணை ஆணையாளர்கள் தலைமையில், துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் அடங்கிய காவல் குழுவினர் மூலம், இன்று (21.9.2019) சென்னையில் 6 இடங்களில் “பொதுமக்கள் சிறப்பு குறை தீர்ப்பு முகாம்” நடைபெற்று வருகிறது.
இன்று (21.9.2019) புதுவண்ணாரப்பேட்டை, சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற, சென்னை பெருநகர காவல், வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சிறப்பு குறை தீர்ப்பு முகாமினை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் துவக்கி வைத்து, சிறப்புரையாற்றினார். மேலும், பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இம்முகாமில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் முனைவர் ஆர்.தினகரன், இ.கா.ப (வடக்கு) மற்றும் காவல்துறை இணை ஆணையாளர், (வடக்கு) திரு.கபில்குமார் சி.சராட்கர், இ.கா.ப., அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர். மேற்படி மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளிக்கப்பட்டது .
புனித தோமையர்மலை, ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற தெற்கு மண்டலத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சிறப்பு குறை தீர்ப்பு முகாமில் காவல் இணை ஆணையாளர் (தெற்கு) திருமதி.சி.மகேஸ்வரி, இ.கா.ப அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். திருமுல்லைவாயில், சி.டி.எச்.சாலையில் உள்ள மங்களம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மேற்கு மண்டலத்தை சேர்ந்த பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமில் காவல் இணை ஆணையாளர் (மேற்கு) திருமதி.பி.விஜயகுமாரி, இ.கா.ப அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். எழும்பூர், மாண்டியத் சாலையில் உள்ள இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியில் நடந்த கிழக்கு மண்டலத்தை சேர்ந்த பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தெற்கு) திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா, இ.கா.ப., மற்றும் காவல் இணை ஆணையாளர் (கிழக்கு) திரு.ஆர்.சுதாகர், இ.கா.ப, அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர்.
மேற்படி சிறப்பு குறை தீர்ப்பு முகாம்களில் கலந்து கொண்டு மனு அளித்த பொதுமக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து தொடர்பான குறை தீர்ப்பு முகாம்
இதே போன்று போக்குவரத்து தொடர்பாக பி-1 வடக்கு கடற்கரை காவல் நிலைய வளாகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் நடைபெற்ற வடக்கு மண்டலத்தைச்சேர்ந்த பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமில் போக்குவரத்து காவல் இணை ஆணையாளர் (வடக்கு) திருமதி.ஜெயகௌரி, இ.கா.ப அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். தியாகராயநகர், பர்கிட்ரோடு, ஶ்ரீஹாலில் நடைபெற்ற தெற்கு மண்டத்தை சேர்ந்த பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமில் போக்குவரத்து காவல் இணை ஆணையாளர் (தெற்கு) திரு.ஏழிலரசன், இ.கா.ப அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here