பாலமேட்டில் கள்ளக்காதல் தகராறில் அரிவாள் வெட்டு – குடும்பமே தற்கொலை

0
57

மதுரை மாவட்டம் பாலமேடு பிருந்தா நகரை சேர்ந்தவர் குமார் (42)ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பெயர் உஷா ராணி வயது (30). இவர் பாலமேடு பேருராட்சியில் மஸ்தூர் பணியாளராக வேலை பார்த்து வந்தார். இங்கு தூய்மை மேற்பார்வையாளராக பணிபுரிபவர் கனகராஜ். இவருக்கும் உஷா ராணிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இந்த விஷயம் உஷாவின் கணவர் குமாருக்கு தெரிந்த நிலையில் தகாத நட்பை கைவிடுமாறு கண்டித்துள்ளார். 

இதனால் கடந்த சில நாட்களாக குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உஷா ராணி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்த குமார் வாழ்க்கையில் வெறுபடைந்தார். நேற்று காலையில் பாலமேடு மதுரை சாலையில் நடந்து சென்ற கனகராஜை குமார் வழிமறித்து  அரிவாளால் வெட்டினார். இந்த சம்பவத்தை தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த குமார் தனது இரு மகன்களையும் கோப்பெருஞ்சோழன் (8), சித்தார்த்தன் (6) அழைத்து கொண்டு பாலமேடு அருகே உள்ள கண்ணாடி கருப்புசாமி கோவிலுக்கு சென்றார். அங்கு தான் வாங்கி வந்த வயலுக்கு தெளிக்கும் குருணை மருந்தை உணவுடன் கலந்து தனது மகன்களுக்கு கொடுத்து விட்டு தானும் குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளனர். அந்த வழியாக சென்றவர்கள் பாலமேடு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அவர்களை மீட்டு பாலமேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர்.

இதில் இளைய மகன் சித்தார்த் இறந்து விட்டார். உயிருக்கு போராடிய குமார் மற்றும் இவரது மூத்த மகன் கோப்பெருஞ்சோழன் ஆகியோரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டு சென்றனர். வழியிலேயே கோப்பெருஞ்சோழனும் இறந்து விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் குமார் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடும்ப பெண்ணின் தவறான நடத்தையால் ஒரு குடும்பமே பலியான சம்பவம் பாலமேடு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தற்கொலை சம்பவத்திற்கு காரணமான கனகராஜ் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று குமாரின் உறவினர்கள் பாலமேடு அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here