பாரிமுனை பகுதியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளஞ்சிறார் உட்பட 2 பேர் கைது. செல்போன்கள்-15 மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்

0
688

சென்னை, பிராட்வே பகுதியைச் சேர்ந்த நீரஜ்குமார் என்பவர் கடந்த 24.11.2019 அன்று மாலை பிராட்வே பேருந்து நிலையம் அருகில் செல்போனில் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் நீரஜ்குமாரின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து நீரஜ்குமார் B-2 எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
எஸ்பிளனேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, மேற்படி குற்றச் செயலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தின் பதிவு எண். TN18 AS 5684 ஐ கண்டுபிடித்து, மேற்படி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளான ஜெகன் (எ)பூச்சி, வ/22, த/பெ.தனசேகர், மணிவாசகம் தெரு, மணலி, சென்னை மற்றும் 17 வயது இளஞ்சிறார் ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து புகார்தாரரின் செல்போன் உட்பட செல்போன்கள்-15 மற்றும் மேற்படி இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் பிடிபட்ட 2 பேரும் மேலும் பல இடங்களில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட 2 பேரும் விசாரணைக்குப் பின்னர் இன்று (03.12.2019) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here