பள்ளிக்கரணை பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறித்துச் சென் ற நபர் கைது. 4 சவரன் தங்கச்சங்கிலி மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்

0
286

சென்னை, பள்ளிக்கரணை, ஜெயச்சந்திரன் நகர் 12வது மெயின் ரோடு, 29வது பிளாக் என்ற முகவரியில் வசித்து வரும் லட்சுமி, பெ/வ.51, மணிவிஸ்வேஸ்வரன் என்பவர் கடந்த 03.3.2020 அன்று மாலை அவரது வீட்டினருகே ஜெயச்சந்திரன் நகர் 4வது தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் லட்சுமியின் கழுத்திலிருந்த 4 சவரன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். இது குறித்து லட்சுமி S-10 பள்ளிக்கரணை காவல் நிலையத்தில்புகார் கொடுத்ததன்பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பள்ளிக்கரணை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்தும், சம்பவ இடத்தினருகில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, குற்றவாளி பயன்படுத்திய இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து குற்றவாளி ரூபன், வ/26, த/பெ. மகிமைதாசன், எண்.28, ஜி.கே.எம்.காலனி, 28வது தெரு, கொளத்தூர், சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து புகார்தாரின் 4 சவரன் தங்கச்சங்கிலி மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய மேற்படி இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட ரூபன் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here