பள்ளிக்கரணை பகுதியில் தனியார் நிறுவனத்தில் ஸ்டீல் தகடுகளை திருடிய 3 நபர்கள் கைது. 8 ஸ்டீல் தகடுகள் பறிமுதல்

0
478

சென்னை, பள்ளிக்கரணையைச் சேர்ந்த ரவிகுமார், வ/37, த/பெ.குமாரசாமி என்பவர் பள்ளிக்கரணை, எஸ்டேட் வளாகம், எண்.3 என்ற முகவரியில் Feb Tech Engg. என்ற கம்பெனியை நடத்தி வருகிறார், கடந்த 10.01.2020 அன்று இரவு மேற்படி கம்பெனியில் இருந்து ரூ.50,000/-மதிப்புள்ள ஸ்டீல் தகடுகளை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். இது குறித்து ரவிகுமார் எஸ்-10 பள்ளிக்கரனை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.

எஸ்-10 பள்ளிக்கரனை காவல் நிலைய குற்றபிரிவு ஆய்வாளர் தலைமையிலான போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். மேலும் சம்பவயிடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணை செய்து மேற்படி ஸ்டீல் தகடுகளை திருடிய 1.மணிகண்டன்,வ/28, த/பெ.ராஜேந்திரன், ராஜிவ்காந்திதெரு, கரிகாட்டுகுப்பம் கானாத்துhர் 2.முருகன்,வ/21, த/பெ.கேசவன், ராஜிவ்காந்தி தெரு, கரிகாட்டுகுப்பம் கானாத்துhர் 3.ஹரி, வ/19, த/பெ.அப்பாதுரை கண்ணதாசன் தெரு, கானாத்துhர் ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 8 மெட்டல் ஷீட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட 3 நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here