பள்ளிக்கரணை பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு நபர்கள் கைது. 300 கிராம் கஞ்சா பறிமுதல்

0
610

சென்னையில் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்களை அதிகரித்து, அதிக அளவில் வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ள சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன் பேரில் அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணித்தும், வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அதன்பேரில், S-10, பள்ளிக்கரணை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (18.09.2019) அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், மேடவாக்கம், பெரியார்நகர், ஏரிக்கரை பகுதியில் கண்காணித்த போது, அங்கு இருவர் ரகசியமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.

அதன்பேரில், மேற்படி இடத்தில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 1.தயாளன், வ/40, த/பெ.தங்கராஜ், எண்.3/90, மேடவாக்கம் மெயின் ரோடு, கோவிலம்பாக்கம் 2.பாஸ்கரன், வ/26, த/பெ.பரமசிவன், பெரியார் நகர் 2வது தெரு, வெள்ளக்கல், மேடவாக்கம் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப்பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here