பல்லாவரம் பகுதியில் வீட்டில் திருடிய 3 பேர் கைது. கவரிங் நகைகள் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல்

0
70

சென்னை, பல்லாவரம், பச்சையம்மன் கோயில் தெருவில் வசிக்கும் செல்வகுமார், வ/48, த/பெ.இருளாண்டி என்பவர் கடந்த 01.7.2020 அன்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, யாரோ மர்ம நபர்கள் வீடு புகுந்து வீட்டிலிருந்த 2 செல்போன்கள் மற்றும் கவரிங் நகைகளை திருடிச் சென்றுவிட்டிருந்தனர். இது குறித்து செல்வகுமார், S-5 பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

S-5 பல்லாவரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தினருகில் தீவிர விசாரணை செய்து, மேற்படி வீடு புகுந்து திருடிய குற்றவாளிகள் 1.வெங்கடேஷ் ராஜா (எ) குண்டன், வ/22, த/பெ.கிரி, இலுப்பை தோட்டம் தெரு, திரிசூலம், 2.தினேஷ்குமார் (எ) கட்டா தினேஷ், வ/21, த/பெ.குட்டிமுருகன், கண்ணபிரான் கோயில் தெரு, திரிசூலம், 3.பாலகணேஷ், வ/23, த/பெ.பாலைய்யா, கண்ணபிரான் கோயில் தெரு, திரிசூலம் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து புகார்தாரரின் செல்போன்கள்-2 மற்றும் கவரிங் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில், கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 3 பேரும் தங்க நகைகள் என திருடியதும், இவர்கள் 3 பேர் மீதும் ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 3 பேரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here