பல்லாவரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது. 750 கிராம் கஞ்சா பறிமுதல்

0
19

சென்னையில் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்களை அதிகரித்து கண்காணித்தல் மற்றும் அதிக அளவில் வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ள சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன்பேரில் அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணித்தும், வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அதன்பேரில், S-5 பல்லாவரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் இன்று (11.02.2020) காலை சுமார் 08.00 மணியளவில் அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், பல்லாவரம், சாரா நகர் மெயின் ரோட்டில் உள்ள கோயில் அருகே கண்காணித்த போது அங்கு 4 பேர் ரகசியமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.

அதன்பேரில், மேற்படி இடத்தில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 1.கிஷோர், வ/21, த/பெ. இளங்கோவன், எண்.24, மலையோரம் தெரு, ஜமீன் பல்லாவரம், 2.நாகராஜ், வ/21, த/பெ. அரிகிருஷ்ணன், பொன்னியம்மன் கோயில் தெரு, பழைய பல்லாவரம், 3.விஜய், வ/20, த/பெ.கேசவன், எண்.770, எம்.ஜி.ஆர். தெரு, ராஜிவ்காந்தி நகர், பழைய பல்லாவரம், 4.அருள்ராஜ், வ/25, த/பெ. முருகன், எண்.2, எம்.ஜி.ஆர். தெரு, ராஜிவ்காந்தி நகர், பழைய பல்லாவரம், ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 750 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் மற்றும் பணம் ரூ.200/- ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட 4 பேரும் விசாரணைக்குப் பின்னர் இன்று (11.02.2020) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here