நமது தாய்த் திருநாட்டின் முப்படை வீரர்களின் தியாகங்களைப் போற்றும் கொடி நாளை முன்னிட்டு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நன்கொடை அளித்தார்

0
554

நமது தாய்த் திருநாட்டின் எல்லைகளை இரவு 
பகலாகக் காத்து வரும் முப்படை வீரர்களின்  தியாகங்களைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ஆம் நாள் படை வீரர் கொடி நாளாக கொண்டாடப்படுகிறது.

இந்த சமூகக் கடமையை நிறைவேற்றிடும் 
பொருட்டு கொடிநாள் அன்று கொடி விற்பனை மூலமும், நன்கொடை மூலமும் திரட்டப்படும் நிதி,முப்படை வீரர்களின் குடும்ப நல்வாழ்விற்கும்  உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வு பணிகளுக்காகவும், முன்னாள் படை வீரர்களின் மேம்பாட்டிற்காகவும் செலவிடப்படுகிறது.

இத்தகை நமது தாய்த் திருநாட்டின் முப்படை வீரர்களின் தியாகங்களைப் போற்றும்  கொடி நாளை  முன்னிட்டு, இன்று (7-12-2019)  கழகத்  தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை சென்னை, அண்ணா  அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் 
நேரில் சந்தித்த சென்னை,  முப்படை  நலச்  சங்கத்தைச் சேர்ந்த எஸ்.மனோகரனிடம் கொடி நாள் நன்கொடையினை அளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here