நந்தனம் பகுதியில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள அதிநவீன ஒன்பது ANPR சி.சி.டி.வி கேமராக்களின் இயக்கத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கிவைத்தார்

0
392

Chennai Runners Association சார்பில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறைக்கு வழங்கப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள அதிநவீன ஒன்பது ANPR (Automatic number-plate recognition) கேமராக்கள், நந்தனம் சந்திப்பு, ஹால்டா சந்திப்பு மற்றும் டைடல் பார்க் சந்திப்பு ஆகிய மூன்று இடங்களில் 3 கேமராக்கள் வீதம் பொருத்தப்பட்டுள்ளது. மேற்படி புதிதாக பொருத்தப்பட்டுள்ள ஒன்பது அதிநவீன ANPR சி.சி.டி.வி கேமராக்களின் இயக்கத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப, அவர்கள் இன்று (10.02.2020) காலை நந்தனம் சிக்னல் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையாளர் திரு.A.அருண், இ.கா.ப, போக்குவரத்து இணை ஆணையாளர் (தெற்கு) திரு.ஏழிலரசன், இ.கா.ப, போக்குவரத்து துணை ஆணையாளர் (தெற்கு) திரு.மயில்வாகணன், இ.கா.ப, கல்லூரி மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here