நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விழுப்புரத்தை சேர்ந்த இளைஞர் கைது

0
54

சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக நேற்று மாலை 3:05க்கு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் தொடர்பு கொண்ட இளைஞர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.இச்சம்பவம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் வயர்லஸ் மூலம் வெடிகுண்டு நிபுணர்களுக்கும், நீலாங்கரை உதவி ஆணையர்க்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.தகவல் அறிந்த நீலாங்கரை உதவி ஆணையர் விஸ்வேஷ்வரய்யா நீலாங்கரை ஆய்வாளர் சரவணன் உள்ளிட்ட போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர் குழு ஆய்வாளர் இளங்கோ, உதவி ஆய்வாளர் நாராயணன், மோப்ப நாய் ராபீன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட வெடிகுண்டு நிபுணர்கள் குழுவுடன் சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித் வீட்டிற்கு சென்று சோதனை செய்ததில்  காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மிரட்டல் புரளி என தெரியவந்தது.இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த நீலாங்கரை போலீசார் நீலாங்கரை உதவி ஆணையர் விஸ்வேஷ்வரய்யா மேற்பார்வையில் ஆய்வாளர் சரவணன் தலைமையில் உதவி ஆய்வாளர் தமிழன்பன்    உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை தேடி வந்த நிலையில் விழுப்புரத்தை சேர்ந்த 20 வயதான புவணேஷ்வர் என்பது தெரியவந்தது.அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் புவணேஷ்வர் முதல்வர் வீட்டிற்கு, நடிகர் விஜய் வீட்டிற்கெல்லாம் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தவர் என்பது, அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.
பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை மனநல மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here