தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 4 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

0
131

சென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும் பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

1.கவியரசு (எ) கவி, வ/30, த/பெ.சுரேஷ், எண்.47, 10வது தெரு, தென்றல் நகர், சரஸ்வதி நகர், திருமுல்லைவாயில் என்பவர் மீது T-10 திருமுல்லைவாயில் காவல் நிலையத்திலும் 2.மணிகண்டன்(எ) ஓட்டைவடை மணி, வ/28, த/பெ.கருப்பசாமி, எண்.26, திருவள்ளுவர் சாலை, கொடுங்கையூர் என்பவர் மீது P-6 கொடுங்கையூர் காவல் நிலையத்திலும் 3.சிவகுமார் (எ) கீரி, வ/31, த/பெ.சண்முகம், எண்.18/15, பேரனுர், திருக்கோவிலூர் தாலுகா, விழுப்புரம் மாவட்டம் என்பவர் மீது R-7 கே.கே.நகர் காவல் நிலையத்திலும் 4.முருகன், வ/22, த/பெ.முகேஷ், எண்.6, 93வது பிளாக், டிசுனாமி குடியிருப்பு, எர்ணாவூர் என்பவர் மீது M-5 எண்ணூர் காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி, குற்றவாளிகள் 4 பேரும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் பரிந்துரை செய்ததன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் மேற்படி 4 குற்றவாளிகளையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய நேற்று (27.1.2020) உத்தரவிட்டார். அதன்பேரில் மேற்படி குற்றவாளிகள் 4 பேரும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில் குற்றவாளிகள் கவியரசு மீது வழிப்பறி வழக்குகள் உள்ளது. மணிகண்டன் (எ) ஓட்டைவடை மணி மீது 2018ம் ஆண்டு முட்டைகோபி என்ற குற்றப்பின்னணி நபரை கொலை செய்த வழக்கு உட்பட சுமார் 10 குற்ற வழக்குகள் உள்ள நிலையில் ஏற்கனவே 2 முறை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிவகுமார் மீது சமீபத்தில் ராபர்ட் என்பவரை கொலை செய்த வழக்கு உள்ளது. முருகன் மீது கஞ்சா வழக்குகள் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here