தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ஒரு பெண் உட்பட 4 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

0
569

சென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும் பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
1.விமல்ராஜ், வ/25, த/பெ.விஜயன், எண்.102, அயோத்தியம்மன் கோயில் தெரு, அனகாபுத்தூர், சென்னை-70, 2. சிலம்பரசன் (எ) சிம்பு, வ/27, த/பெ. ஏழுமலை, எண்.05/415, ஓட்டேரி 9வது தெரு, வண்டலூர், காஞ்சிபுரம் மாவட்டம் ஆகிய 2 பேர் மீது S-6 சங்கர் நகர் காவல் நிலையத்திலும், 3.சாந்தி, பெ/ வ.48, க/பெ.சக்திவேல், எண்.3, கிருஷ்ணன் தெரு, டீச்சர்ஸ் காலனி, கொடுங்கையூர், சென்னை என்பவர் மீது P-6 கொடுங்கையூர் காவல் நிலையத்திலும், 4.கிச்சா (எ) கிருஷ்ணமூர்த்தி, வ/32, த/பெ.சுப்பராயன், எண்.11799, குடிசைமாற்று வாரிய குடியிருப்பு, கண்ணகிநகர் என்பவர் மீது J-11 கண்ணகிநகர் காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி, குற்றவாளிகள் 4 பேரும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் பரிந்துரை செய்ததன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் மேற்படி 4 குற்றவாளிகளையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய நேற்று (12.12.2019) உத்தரவிட்டார். அதன்பேரில் மேற்படி குற்றவாளிகள் 4 பேரும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில் குற்றவாளிகள் விமல்ராஜ் மற்றும் சிலம்பரசன் மீது தலா 3 கொலை வழக்குகள் உட்பட பல குற்ற வழக்குகள் உள்ள நிலையில் ஏற்கனவே ஒரு முறை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கிச்சா (எ) கிருஷ்ணமூர்த்தி மீது 2 கொலை வழக்குகள் மற்றும் 2 கொலை முயற்சி வழக்குகள் உட்பட பல வழக்குகள் உள்ள நிலையில் ஏற்கனவே ஒரு முறை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்னளர். சாந்தி என்பவர் மீது கஞ்சா விற்பனை செய்தது தொடர்பாக பல வழக்குகள் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here