தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 1 பெண் உட்பட 9 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

0
455

சென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும் பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
1.கோதண்டன், வ/60, த/பெ.சாம்பசிவம், எண்.85/51, பாலகிருஷ்ண காலனி, காலடிப்பேட்டை, திருவொற்றியூர், சென்னை, 2.குமார், வ/39, த/பெ.மகாலிங்கம், எண்.154 ஏ, பெருமாள் கோயில் தெரு, பனஞ்சேரி கிராமம், திருவள்ளூர் மாவட்டம் 3.ராஜேஷ்வரி, பெ/வ.62, க/பெ.அன்பு, எண்.4, 1வது தெரு, காவாங்கரை, திருநகர், சென்னை ஆகிய 3 பேர் மீது R-10, எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்திலும், 4.மணிகண்டன், வ/41, த/பெ. பெரியகருப்பன், எண்.1/5, 9வது குறுக்கு தெரு, டி.பி.சத்திரம், சென்னை, 5.காமராஜ், வ/39, த/பெ.ராதாகிருஷ்ண பிள்ளை, எண்.10,நாகாத்தம்மன் கோவில் தெரு, செந்தூர்புரம் மெயின்ரோடு, காட்டுப்பாக்கம், சென்னை ஆகிய 2 பேர் மீது T-12 பூந்தமல்லி காவல் நிலையத்திலும் 6.பாஸ்கரன், வ/36, த/பெ.தட்சிணாமூர்த்தி, 5வது தெரு, ராயலாநகர், ராமாபுரம், சென்னை, 7.சுரேஷ் (எ) இராமாபுரம் சுரேஷ், வ/39, த/பெ.மோகன், எண்.5/7, ஆண்டவர் நகர், ராமாபுரம், சென்னை ஆகிய 2 பேர் மீது R-11 ராயலா நகர் காவல் நிலையத்திலும், 8.ராஜேஷ் பிரித்வி (எ) தினேஷ் (எ) தீனதயாளன், வ/29, த/பெ.ராமச்சந்திரன், எண்.141, நொச்சிபாளையம், திருப்பூர் என்பவர் மீது F-2 எழும்பூர் காவல் நிலையத்திலும், 9.ஷேக்அப்துல்காதர், வ/28, த/பெ.முகமது சாலி, எண்.5 சர்புதீன் கார்டன், ராயப்பேட்டை என்பவர் மீது D-4 ஜாம்பஜார் காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி, குற்றவாளிகள் 9 பேரும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் பரிந்துரை செய்ததன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் மேற்படி 9 குற்றவாளிகளையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் மேற்படி குற்றவாளிகள் 9 பேரும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் குற்றவாளிகள் கோதண்டன், குமார் மற்றும் ராஜேஷ்வரி ஆகியோர் மீது கஞ்சா விற்பனை செய்தது தொடர்பாக பல வழக்குகள் உள்ள நிலையில் குமார் ஏற்கனவே ஒரு முறையும், ராஜேஷ்வரி ஏற்கனவே 3 முறையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மணிகண்டன் மற்றும் காமராஜ் ஆகியோர் மீது கஞ்சா வழக்குகள் உள்ளது. பாஸ்கரன் மீது ஒரு கொலை வழக்கு மற்றும் கஞ்சா விற்பனை செய்து தொடர்பாக பல வழக்குகள் உள்ள நிலையில் ஏற்கனவே ஒரு முறை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுரேஷ் (எ) ராமாபுரம் சுரேஷ் என்பவர் மீது கஞ்சா வழக்குகள் உள்ளது. ராஜேஷ் பிரித்வி (எ) தினேஷ் (எ) தீனதயாளன் என்பவர் மீது பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தது தொடர்பாகவும், வேலை வாங்கி தருவதாக கூறி பல பெண்களிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டது தொடர்பாகவும் வழக்குகள் உள்ளது. ஷேக் (எ) அப்துல் காதர் மீது 3 கொலை முயற்சி வழக்குகள் உட்பட பல வழக்குகள் உள்ள நிலையில் ஏற்கனவே ஒரு முறை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர் ஆவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here