தீபாவளி பண்டிகையை முன்னிட்டு,மூன்று நாட்களுக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் கீழ்கண்ட ஆறு பகுதிகளிலிருந்து இயக்கப்பட உள்ளது

0
175

வரும் 27.10.2019 அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொது மக்களின் வசதிக்காக, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவும் சென்னையிலிருந்து, தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு 24.10.2019 முதல் 26.10.2019 வரை மூன்று நாட்களுக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் கீழ்கண்ட ஆறு பகுதிகளிலிருந்து இயக்கப்பட உள்ளது.
1) புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். (கோயம்பேடு) புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள்:
சென்னையிலிருந்து வேளாங்கன்னி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, திருவனந்தபுரம், பண்ருட்டி, விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம், பெங்களுர் செல்லும் பேருந்துகள்

2) மாதவரம் ; பேருந்து நிறுத்தத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள்:
சென்னையிலிருந்து ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் தமிழக பேருந்துகள் மற்றும் ஆந்திர மாநிலப் பேருந்துகள் அனைத்தும்.

3) பூந்தமல்லி மாநகராட்சி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள்:
காஞ்சிபுரம், ஆற்காடு, ஆரணி, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஓசூர் செல்லும் பேருந்துகள்,

4) தாம்பரம் சானிட்டோரியம் அறிஞர்அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள்:
திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் அதைத் தாண்டி செல்லும் பேருந்துகள்.

5) தாம்பரம் ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் :
திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலுhர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்துகள்.

6) கே.கே.நகர்; மாநகர போக்குவரத்து கழக பேருந்து பணிமனையிலிருந்து இயக்கப்படும் பேருந்துகள்:
கிழக்கு கடற்கரை சாலை வழியாக, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிகப்படியான பேருந்துகள் இயக்கப்பட உள்ளதால், பொதுமக்களின் வசதிக்காக போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கீழ்க்கண்ட இடங்களில் பேருந்துகளை நிறுத்தி பின் சென்னை நகருக்குள் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1) அரசு பேருந்துகள் (கோயம்பேடு)

வண்டலூர் மேம்பாலம், இரும்புலியூர், மதுரவாயல் போரூர் டோல் பிளாசா, கார்த்திக்கேயன் நகர், எம்.ஜி.ஆர்.யூனிவர்சிட்டி, நெற்குன்றம், பூந்தமல்லி பைபாஸ், தூசன்பவர் அருகிலும் மற்ற இடங்களிலிருந்து அதிகப்படியாக கோயம்பேடு நோக்கி வரும் பேருந்துகள் மதுரவாயல் மேம்பாலம், வானகரம், இயேசு அழைக்கிறார் வளாகம், கோயம்பேடு மேம்பாலம், கோயம்பேடு மலர் வணிக வளாகத்தின் அருகிலும், கோயம்பேடு காவல் நிலையத்தின் அருகிலும் நிறுத்தி வைத்து அங்கிருந்து கோயம்பேடு பேருந்து பணிமனைக்கு உள்ளே அனுமதிக்கப்படும்.

2) ஆம்னி பேருந்துகள்:

ஆம்னி பேருந்துகள், கோயம்பேடு மார்கெட் ‘E’ ரோட்டில் உள்ள நிறுத்தத்திலிருந்து, ‘B’ ரோடு வழியாக, பூந்தமல்லி நெடுஞ்சாலை சென்று அங்கிருந்து வெளிவட்ட சாலை (நசரத்பேட்டை) வழியாக ஊரப்பாக்கம் சென்று அங்கிருந்து செல்லவேண்டிய ஊர்களுக்கு செல்லலாம். ஆம்னி பேருந்துகள் மதுரவாயல் பைபாஸ் சாலை மற்றும் 100 அடி சாலையில் வடபழனி நோக்கி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

3) கனரக மற்றும் சரக்கு வாகனங்கள்:
தீபாவளி பண்டிகையின் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை முன்னிட்டு, வரும் 24, 25, 26 மற்றும் 28.10.2019 ஆகிய நான்கு நாட்களிலும், பகல் 2 மணி முதல் மறுநாள் விடியற்காலை 2 மணிவரையிலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மார்க்கங்களிலிருந்து சென்னை வரும் கனரக வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் மேற்படி வாகனங்கள் 1.செங்கல்பட்டு மார்க்கமாக வரும் வாகனங்கள் வண்டலூர் பாலம் வழியாக சென்னை வெளிவட்ட சாலையில் நெமிலிச்சேரியில் சி.டி.எச். சாலை அடைந்து பாடி மேம்பாலம் வழியாக ஜி.என்.டி. சாலை மாதவரம் ரவுண்டனா வழியாகவும் 2.திருவள்ளூர் மற்றும் திருபெரும்புதூர் மார்க்கமாக வரும் வாகனங்கள் நசரத்பேட்டை இடது புறம் திரும்பி சென்னை வெளிவட்ட சாலை வழியாக சென்னை செல்லவும் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

100 அடி சாலை, பாடி வழியாக கோயம்பேடு நோக்கி வரும் சரக்கு வாகனங்கள் பாடி மேம்பால சந்திப்பில் சி.டி.எச்.சாலை வழியாக திரும்பி செல்ல வேண்டும்.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேடு நோக்கி வரும் சரக்கு வாகனங்கள் நடுவாங்கரை சந்திப்பு மற்றும் நெல்சன்ச் மாணிக்கம் சாலை மேம்பாலம் வழியாக அண்ணாநகர் 3வது அவென்யூ, 2வது அவென்யூ, சாந்தி காலனி, அம்பத்தூர் எஸ்டேட் ரோடு, மாந்தோப்பு வழியாக மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும்.
கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள தனியார் வாகனங்கள் ஈ.வெ.ரா சாலையில் மதுரவாயல் நோக்கிச் செல்பவர்கள் நடுவாங்கரை சந்திப்பு, சாந்தி காலனி, 13வது மெயின்ரோடு, 2வது அவென்யூ சாலை, எஸ்டேட் ரோடு, மாந்தோப்பு, வானகரம் வழியாக மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அதேபோல் வடபழனி நோக்கிச் செல்லும் தனியார் வாகனங்கள், என்.எஸ்.கே. நகர் சந்திப்பு, ரசாக் கார்டன், எம்.எம்.டி.ஏ. காலனி, வினாயகபுரம் வழியாக செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பண்டிகைக் காலங்களில் பொதுவாகவே தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் இடையே போக்குவரத்து நெரிசல் இருப்பது இயல்பாக உள்ளதால், தென்மாவட்டங்களுக்கு செல்ல நினைக்கும் தனியார் வாகன ஓட்டுனர்கள் (L.M.V) இ.சி.ஆர் மற்றும் ஓ.எம்.ஆர்.சாலை வழியாக செங்கல்பட்டு, திருக்கழுகுன்றம் வழியாக செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here